துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

பன்னிப்பிட்டிய, தெபானம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நபரொருவர் பலியாகியுள்ளார்.

கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 12 மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திலிருந்து வெற்றுத்தோட்டாக்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Related posts