துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம் – இருவர் கைது

33
துப்பாக்கிச்சூடு,
W3Schools

கோனகங்கார, 17 ஆம் மைல்கல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இன்று (15) அதிகாலை 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர், புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோனகங்கார பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

W3Schools