நாடாளுமன்ற விசேட தெரிவிக்குழுவின் முன்னிலையில் ஸ்ரீலாங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர சாட்சியம் அளித்து வருகின்றார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழு விசாரணைகளை இன்று பிற்பகல் ஆரம்பமாகியுள்ளன.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் கல்வியமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு இன்றையதினம் விசேட தெரிவுக் குழுவில் சாட்சியம் அளிப்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.