தெற்கு சூடான் தலைவர்களின் கால்களை முத்தமிட்ட பாப்பரசர் பிரான்சிஸ்

57
W3Schools

தென் சூடான் தலைவர்களின் கால்களை பாப்பரசர் பிரான்சிஸ் முத்தமிட்டுள்ளார்.

இதனையடுத்து, பாப்பரசர் – அரச தலைவர்களின் கால்களை முத்தமிட்ட காட்சிகளை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

கடந்த 2013-ஆம் ஆண்டில் இருந்து நடந்த பல அட்டூழியங்களால் மூண்ட உள்நாட்டுப் போரால், தெற்கு சூடான் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

2013-ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில், தெற்கு சூடான் ஜனாதிபதி சல்வா கிர், நாட்டின் துணை ஜனாதிபதிான ரெய்க் மச்சாரை பதவிநீக்கம் செய்தார்.

மேலும், டிசம்பர் மாதத்தில், ரெய்க் மச்சார் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார். இதனை, ரெய்க் மச்சார் மறுத்திருந்தார்.

இதன் பின்னர், இவ்விரு தரப்பினருக்கும் ஆதரவான படையினர் மோதலில் ஈடுபட ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், கடந்த tருடம் யுத்தம் முடிவுக்கு வந்ததுடன் அவர்கள் சமாதான உடன்படிக்கைக்கு கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.

W3Schools