தேசிய போதைபொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவையில் விழிப்புணர்வு செயலமர்வு

தேசிய போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவையில் வீதி நாடகமும் விழிப்புணர்வு செயலமர்வும் பொகவந்தலாவை ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது பொகவந்தலாவை பிரதேச பாடசாலைகளில் கல்வி கற்கும் சுமார் 1000த்துக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்த கொண்டனர்.

அத்துடன், பொகவந்தலாவை பேருந்து தரிப்பிடத்தில் போதை பொருள் ஒழிப்பு தொடர்பான வீதி நாடகம் ஒன்று பாடசாலை மாணவர்களால் அரங்கேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து பொகவந்தலாவை ஸ்ரீ தண்டாயுபாணி கலாசார மண்டபத்தில் விழிப்புணர்வு செயலமர்வு ஒன்றும் இடம்பெற்றது.