தலைவி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் ஏ.எல்.விஜய், பெரிய பட்ஜெட்டில் திரைப்படமாக இயக்குகிறார். இதனை விஷின்துரி, ஷாலிஸ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார்.

படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் தயாராகிறது. தமிழ் பதிப்புக்கு தலைவி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மற்ற மொழிகளுக்கான டைட்டில் அறிவிக்கப்படவில்லை. இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். இதற்காக உடல் எடையை கூட்டியுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு லண்டன் சென்ற படக்குழு படத்தில் நடிப்பவர்களுக்கு மேக்-அப் டெஸ்ட் எடுத்தது. இதில் அனைத்து கேரக்டர்களுக்கும் திருப்தி ஏற்பட்டதால் நேற்று படத்தை முறைப்படி தொடங்கி விட்டார்கள்.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram