நரேந்திர மோடி, 100 நாள் ஆட்சி

இந்திய சுதந்திர தினத்தின் 73ஆவது ஆண்டு நிகழ்வில் டெல்லி செங்கோட்டையில் உரை நிகழ்த்திய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்கள் கலந்த தலைப்பாகையை அணிந்திருந்தார்.

பகட்டான ஆடை இல்லாமல் வெள்ளை நிற அரை கை குர்தா அணிந்திருந்தார். இந்திய பிரதமராக, நரேந்திர மோதிக்கு இது ஆறாவது சுதந்திர தின நிகழ்வு.

சரி, இதற்கு முந்தைய சுதந்திர நிகழ்வுகளில் மோதி என்ன மாதிரியான நிறம் மற்றும் வடிவங்களில் தலைப்பாகை அணிந்திருந்தார் என பார்ப்போம்.

2018 : 72ஆவது சுதந்திர தின நிகழ்வில், அவர் காவி நிறத்தில் தலைப்பாகை அணிந்திருந்தார். இந்த தலைப்பாகையில் சிறிய அளவில் சிவப்பு வண்ணமும் இருந்தது. தலைப்பாகை கணுக்கால் வரை நீளமாக இருந்தது.

2017 : இந்த ஆண்டு அவர் வெளிர் சிவப்பும், மஞ்சளும் கலந்த தலைப்பாகை அணிந்திருந்தார். இதில் பட்டு ஜரிகை கோடுகளும் இருந்தன. இந்தத் தலைப்பாகையின் வால் பகுதி நீளமாக இருந்தது.

2016 : பிங் மற்றும் மஞ்சள் கலந்த வண்ணத்தில் தலைப்பாகை அணிந்திருந்தார்.

2015 : மஞ்சள் நிற தலைப்பாகையில், சிவப்பு மற்றும் அடர் பச்சை உள்ளிட்ட கோடுகள் இருந்தன.

2014 : பிரதமராக தனது முதல் சுதந்திர தின நிகழ்வில், ஜோத்பூரி டிசைன் தலைப்பாகையை அணிந்திருந்தார். சிவப்பு நிறத்திலான இந்தத் தலைப்பாகையின் வால் பகுதியில் பச்சை ஜரிகை இருந்தது.