யுவதி

தொழில் வாய்ப்பு பெற்றுதருவதாக கூறி 225,000 ரூபாய் பண மோசடி செய்த சந்தேக நபரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (11) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் டிப்போவில் பணியாற்றி ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் மின்சார சபையின் கடிதம் ஆகியவற்றை போலியான முறையில் தயாரித்து, பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

யுவதி ஒருவருக்கு தொழில் வாய்பு பெற்றுதருவதாக கூறி, போலியான ஆவணங்களை தயாரித்து ஏமாற்றி பணம் பெற்றுள்ளதாக, ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து, ஹட்டன் பொலிஸார் மேற்கொள்ளபட்ட விசாரணைகளின் போது, குறித்த நபர் கைது செய்யபட்டுள்ளார்.

கைது செய்யபட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் இன்று (12) முன்னிலைபடுத்தபட உள்ளதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.