Latest news from around the world

தோனியை பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்

இந்திய அணியின் தல தோனி ஒரு அனுபவ வீரராக திகழ்கிறார் என்றும், இளம்வீரர்களுக்கு வழிகாட்டியாக உள்ளார் என்றும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் பாராட்டியுள்ளார்.

மேலும் அவர், தோனி கணினிகளைவிட வேகமானவர் என்று தனது யூட்யூப் பக்கத்தில் கூறியுள்ளார்.

“கணினி நாம் என்ன சொன்னாலும் கண் இமைக்கும் நேரத்தில் செய்து முடிக்கும். தோனி அதைவிட வேகமானவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.