Sri Lanka 24 Hours Online Breaking News

“தோனி.. தோனி என கத்தினாலும் சென்னை ரசிகர்களுக்கு நன்றி”

0

தோனியின் பெயர் உச்சரிக்கப்பட்டாலும் எனக்கு ஆதரவளித்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் தெரிவித்துள்ளார்.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் துடுப்பாட்டம் செய்த இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.

தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 6 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அணித்தலைவர் விராட் கோலியும் 4 ஓட்டங்களில் ஏமாற்றினார். சற்று நேரம் நிலைத்து நின்ற ரோகித் சர்மா 36 ஓட்டங்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். 80 ஓட்டங்களுக்கு மூன்று முக்கிய விக்கெட்களை இந்திய அணி இழந்தது.

பின்னர், ஸ்ரேயாஸ் ஐயர் உடன் ரிஷப் பன்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ஓட்டங்களை சேர்ந்தனர். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி, பின்னர் அடித்து விளையாடி ஓட்டங்களை சேர்த்தது.

இருவரும் அசத்தலாக விளையாடி அரைசதம் அடித்தனர். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியின் ஓட்ட வேகமாக உயர்ந்தது. இருப்பினும், ஸ்ரேயாஸ் ஐயர் 70, ரிஷப் பன்ட் 71 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட் இழப்புக்கு 47.5 ஓவரில் 291 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டி வெற்றிப் பெற்றது.

போட்டி முடிந்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ரிஷப் பன்ட் “ஒரு வீரருக்கு மைதானத்தில் ரசிகர்கள் ஆதரவு இருக்க வேண்டியது அவசியம். சென்னை ரசிகர்கள் எனக்கு ஆதரவு கொடுத்தனர்.

நான் என் ஆட்டத் திறனை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறேன். தினமும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். சர்வதேச போட்டிகளில் அணியின் நலனுக்காக விளையாட வேண்டும். அதைதான் நேற்று நான் செய்தேன்.

இறுதியில் எனக்கு ஓட்டமும் நம்பிக்கையும் கிடைத்தது. தோனியின் பெயர் உச்சரிக்கப்பட்டாலும் எனக்கு ஆதரவளித்த சென்னை ரசிகர்களுக்கு நன்றிள” என்றார்.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Get real time updates directly on you device, subscribe now.

You might also like