நடிகர் டைபிஸ்ட் கோபு காலமானார்

59
டைபிஸ்ட் கோபு
W3Schools

தமிழ் சினிமாவில் அதே கண்கள் படத்தின் மூலம் தன் சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் டைபிஸ்ட் கோபு.

உயர்ந்த மனிதன், காசேதான் கடவுளடா, பரீட்சைக்கும் நேரமாச்சு, மைக்கேல் மதன் காமராஜன் என முக்கிய படங்களில் பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

500 க்கும் அதிகமான படங்களில் நடித்த இவர் திருச்சியை சேர்ந்தவர். 50 ஆண்டுகள் சினிமாவில் பணியாற்றியுள்ளார்.

கல்லூரியில் படிக்கும் போதே நாடகங்களில் நடித்து வந்தார். அதில் டைப்பிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்ததால் கோபாலரத்தினம் என்ற இவரின் பெயரை டைபிஸ்ட் கோபு என மாறியது.

நாகேஷின் நண்பரான இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றவர். 82 வயதான இவர் ராயப்பேட்டையில் மனைவியுடன் வாடகை வீட்டில் கடைசி காலத்தில் வாழ்ந்துவந்துள்ளார். அவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் புதன் கிழமை இன்று உயிரிழந்துள்ளார். அவரது இறுதி சடங்கு நாளை வியாழக்கிழமையில் அவரது இல்லத்தில் காலை 11 மணியளவில் நடைபெறுகிறது.

Website – www.colombotamil.lk

Facebook – http://www.facebook.com/TheColomboTamil

Twitter – www.twitter.com/TheColomboTamil

Instagram – www.instagram.com/TheColomboTamil

Contact us – info@colombotamil.lk

#SriLankaNews, #SriLankanNews, #LankaNews, #Lanka, #Tamil, #SriLanka, #ColomboNews

W3Schools