நத்தைகளுக்கான ஓட்டப்பந்தயம்

நத்தைகளில் ஆக வேகமானதைக் கண்டுபிடிக்க 200 நத்தைகள் போட்டிக்களத்தில் இறக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தின் கோங்ஹாம் கிராமத்தில் 1960களிலிருந்து நத்தைகளுக்கான ஓட்டப்பந்தயம் நடந்து வருகிறது.

மேசைமீது விரிக்கப்பட்ட ஈரத் துணியின்மீது நடைபெறுகிறது போட்டி.

போட்டியில் பங்குபெறும் நத்தைகளை வீட்டிலிருந்து கொண்டுவரலாம் அல்லது போட்டி நடக்கும் இடத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாண்டுப் போட்டிகளில் ஆங்கில ஆசிரியர் ஒருவரின் நத்தையான ‘Sammy’ முதல் இடத்தைப் பிடித்தது. அது எடுத்துக்கொண்ட நேரம் 2 நிமிடம் 38 வினாடிகள்.

1995இல் 2 நிமிடம் 20 வினாடிகளில் 33 செண்டிமீட்டர் ஓட்டப்பந்தயப் பாதையைக் கடந்து கின்னஸ் உலகச் சாதனையைப் படைத்தது ‘Archie’ என்ற நத்தை.