நள்ளிரவில் கத்தி முனையில் கொள்ளை – யாழில் சம்பவம்

35
W3Schools

யாழ்ப்பாணம், புலோலி தெற்கு, புற்றளைப் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை ஒரு மணியளவில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் கதவை உடைத்து நுழைந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்தவர்களை கத்தி முனையில் அச்சுறுத்தி அவர்களிடமிருந்த 17 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

W3Schools