இன்று நள்ளிரவு (17) முதல் பாண் இறாத்தலின் விலை 5 ரூபாயால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று முதல், கோதுமை மாவின் விலை கிலோகிராம் ஒன்றுக்கு 8 ரூபாயால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.