நாடாளுமன்றம் இன்று முற்பகல் கூடுகின்றது

64
நாடாளுமன்றம்
colombotamil.lk

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் விவாதிப்பதற்காக நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 மணிக்கு கூடவுள்ளது.

குறித்த விவாதத்தை இன்றைய நாள் முழுவதும் நடத்துவதற்கு நேற்று இடம்பெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் நேற்று தெரிவித்திருந்தார்.

அத்துடன், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளை கருத்திற் கொண்டு அவசரகால சட்டம் தொடர்பான யோசனையும் இன்றைய தினம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றில் உரையாற்றியபோது கூறியிருந்தார்.

முன்னதாக, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளை கருத்திற் கொண்டு அவசரகால சட்டம் தொடர்பான யோசனை கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!