நாடாளுமன்றம்

நாடாளுமன்ற வருடாந்த உணவு மற்றும் பானங்களுக்கான  120 மில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், உணவுகள் வீணாகுவதை குறைப்பதற்காக, நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவருந்த வருபவர்கள் பற்றிய விவரத்தை முன்னரே பெற்று, உணவு தயாரிக்கும்படி சபாநாயகர் ஆலோசனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மின்சாரத்திற்கு 80 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்படுவதுடன், நாடாளுமன்ற குளிரூட்டிகளுக்கு அதிக மின்கட்டணம் செலவாகிறது.

தொலைபேசி வசதிக்காக 14.5 மில்லியன் ரூபாய், குடிநீருக்காக 9 மில்லியன் ரூபாய் செலவாகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.