Sri Lanka 24 Hours Online Breaking News

நாடோடிகள் புகழ் கோபாலகிருஷ்ணன் காலமானார்

0

நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள குணச்சித்திர நடிகர் கே.கே.பி. கோபாலகிருஷ்ணன் இன்று காலமானார். அவருக்கு வயது 54.

2009ம் ஆண்டு சமுத்திரக்கனி – சசிகுமார் கூட்டணியில் வெளிவந்த படம் – நாடோடிகள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பரவலான வரவேற்புகள் கிடைத்தன.

இந்தப் படத்தில் நடிகை அனன்யாவின் தந்தையாக, சசிகுமார் – அனன்யா காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வேடத்தில் நடித்து கவனம் பெற்றார் கோபாலகிருஷ்ணன்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோபாலகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

கோபாலகிருஷ்ணனின் மறைவுக்குத் தமிழ்த் திரையுலகக் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like