நாணயக் குற்றிகளுக்கு புதிய கரும பீடம்

34
W3Schools

பொதுமக்களுக்கு நாணயக் குற்றிகளை வழங்குவதற்காக கரும பீடம் இன்று திறக்கப்பட்டுள்ளது.

இக்கருமபீடம், அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தவிர்ந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் மு.ப 9.00 மணி தொடக்கம் மு.ப 11.00 மணிவரை பொதுமக்களுக்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

இலங்கை மத்திய வங்கியின் தலைமைக் காரியாலயக் கட்டிடத்திலுள்ள தரைத்தள காசுக் கரும பீடங்களில் குறித்த புதிய கரும பீடம் திறக்கப்பட்டள்ளது.

நாணயக் குற்றிகளானது, ஒவ்வொன்றும் 100 எண்ணிக்கைகள் கொண்ட பக்கற்றுக்களில் வழங்கப்படுமென்பதுடன் ஒரே நேரத்தில் குறைந்தளவு ஒரே முகப்பெறுமதியிலிருந்து 100 குற்றிகளைக் கொண்ட ஒரு பக்கற்றேனும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல் வேண்டும்.

அதிகபட்சமாக 20,000 ரூபா வரை நாணயக்குற்றிகளை ஒருவர் மாற்றிப் பெற்றுக்கொள்ள முடியும்.

நாணயக்குற்றிகளை மொத்தமாகப் பெற்றுக்கொள்ள விரும்பும் தனிப்பட்ட நபரோ அல்லது நிறுவனங்களோ, இரு வேலைநாட்களுக்கு முன்னர் நாணயக்குற்றி விநியோகம் தொடர்பான அத்தியட்சகருக்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பான விண்ணப்படிவங்கள் மற்றும் அறிவுறுத்தல் படிவங்களை காசாளர் கருமபீடத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு, தரவுகளை மத்திய வங்கியின் https://www.cbsl.gov.lk/ எனும் முகவரி ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

W3Schools