நாமல் குமார – அமித் வீரசிங்க கைது

44
colombotamil.lk

ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் என அறியப்படும் நாமல் குமார கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வரக்காபொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு வந்திருந்த நிலையில், நாமல் குமார, கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மகசோன் பலகாய இயக்கத்தின் தலைவர் அமித் வீரசிங்கவும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விசேட பொலிஸ் குழுவினரால் கண்டியில் வைத்து அமித் வீரசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவமொன்று தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.