Sri Lanka 24 Hours Online Breaking News

நாளாந்த சம்பளம் மார்ச் 1ஆம் திகதி தொடக்கம் 1,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்

0

ஜனாதிபதி தேர்தல் உறுதிமொழிக்கு அமைவாக தோட்ட தொழிலாளர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் நாளாந்த சம்பளம் 1,000 ரூபாயாக அதிகரிக்கப்படும் என, இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் கடந்த 20 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், முதலாளிமார் சம்மேளனம் பெருமளவில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.

தோட்ட முதலாளிமார் சம்மேளனம் பெருந்தோட்டத்துறை அமைச்சர், ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்திற்கு அமைவான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தமது பிரதேச செயலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறினார்.

மக்களின் வரிச்சுமையை தற்போதைய அரசாங்கம் பாரியளவில் குறைத்ததாக இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

புதிய வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அரச நிறுவனங்களின் வினைத்திறனை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த திட்டங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கண்காணித்து வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் 54 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் மூன்று மாதகாலத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படுமென இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like