ஊடக அறம், உண்மையின் நிறம்!

நியூசிலந்து எரிமலை வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு

நியூசிலந்தின் White Island எரிமலை வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனையில் காயங்களுக்காகச் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இரண்டாவது நபர்.

உயிரிழந்த இருவரின் சடலங்களை மீட்க முடியவில்லை.

எரிமலை வெடித்தபோது அந்தப் பகுதியில் 47 பேர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணிகள்.

எரிமலை வெடித்துச் சிதறியபோது வெளிப்பட்ட சூடான சாம்பலும், நீராவியும் பட்டு அவர்கள் கடுமையான தீப்புண் காயங்களுக்கு ஆளாயினர்.

கடந்த மாதம் 9ஆம் திகதியன்று எரிமலை வெடிப்புச் சம்பவம் நடந்தது.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Leave A Reply

Your email address will not be published.