ஊடக அறம், உண்மையின் நிறம்!

நிர்வாண வீடியோ, அடுத்தடுத்து பாலியல் தொல்லை! இளம்பெண் கொடுத்த அதிர்ச்சி!!

சென்னை திருவொற்றியூரில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தவரை இளம்பெண் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.

சாத்தாங்காடு பகுதியை சேர்ந்த சேகர் அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதனை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை காட்டி மிரட்டி பல ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண் பெரும் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் வழக்கம் போல் இளம்பெண்ணை தேடிச் சென்ற போது தயாராக வைத்திருந்த கத்தியால் சேகரின் கழுத்தை அறுத்துள்ளளார். இதில் சேகர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல் துறையினர் கொலை செய்த இளம் பெண்ணை கைது செய்தனர். அப்போது, பாலியல் வன்கொடுமைகளை சகித்துக் கொள்ள முடியாமல் சிறைக்கு செல்வதே மேல் என்று எண்ணி கொலை செய்ததாக இளம்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அலைபேசியில் பதிவு செய்த படங்களை கொண்டு சேகர் தன்னை தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் இளம்பெண் புகார் தெரிவித்துள்ளார்.