Sri Lanka 24 Hours Online Breaking News

நீங்கள் சரியான முறையில்தான் சாப்பிடுகிறீர்களா?

0

எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக் கூடாது என்பது பற்றிப் பொதுவெளியில் அதிகம் பேசுகிறோம். ஆனால், எப்படிச் சாப்பிட வேண்டும் என்பது பற்றி நிறைய பேருக்குத் தெரிவதில்லை.

ஒரு வாய் சாப்பிடுவார்கள். உடனே இரண்டு மடக்கு தண்ணீர் குடிப்பார்கள். சாப்பிடும்போதுதான் ஊர்க்கதையெல்லாம் பேசுவார்கள். இவை இரண்டுமே தவறு.

* சாப்பிடுவதற்கு முன்னர் தண்ணீர் அருந்தக் கூடாது. அதேபோல, சாப்பிட்டு அரைமணி நேரம் வரை தண்ணீர் அருந்தக் கூடாது. விக்கல், அடைப்பு போன்று உணவை விழுங்குவதில் சிக்கல் இருந்தால் மட்டும் கொஞ்சம் தண்ணீர் குடிக்கலாம்.

சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால், வயிற்றில் உணவைச் செரிக்க உதவும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் நீர்த்துப்போய்விடும். உமிழ்நீர்ச் சுரப்பையும் பாதிக்கும்.

* சாப்பிடும்போது, ‘என்ன சாப்பிடுகிறோம்’ என்று உணர்ந்து, நிறம், மணம் ஆகியவற்றை ரசித்து ருசித்துச் சாப்பிட வேண்டும். இதை ‘மைண்ட்ஃபுல் ஈட்டிங்’ என்பார்கள். எதையேனும் சிந்தித்துக்கொண்டோ, டிவி பார்த்துக்கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ சாப்பிடக் கூடாது.

* பிறருடன் பேசிக்கொண்டே சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். வாயை மூடியவாறு மென்று விழுங்க வேண்டும்.

அளவுக்கு அதிகமான சாப்பாட்டைச் சாப்பிடும்போது, சிலருக்குச் செரிமானமாகாது. மறுநாள் வரைக்கும் வயிறு மந்தமாக இருக்கும். அவர்களுக்காக…

* சாப்பிட்டு முடித்ததும் சீரகத்தைத் தண்ணீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு வடிகட்டி அந்தத் தண்ணீரைக் குடிக்கலாம்.

* கொஞ்சம் ஓமத்தைக் கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.

* இரவு சாப்பிட்டவுடன் தூங்கச் செல்வது தவறு. சாப்பிட்டு இரண்டு முதல் மூன்று மணி நேரம் கழித்தே தூங்கச் செல்ல வேண்டும்.

* சிலர் செரிமானத்துக்காகச் சாப்பிட்டவுடன் நடப்பார்கள். அதுவும் நல்லதல்ல. குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்தே நடக்க வேண்டும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like