Sri Lanka 24 Hours Online Breaking News

நீதிமன்ற அவமதிப்பு; அஜித் பிரசன்ன விளக்கமறியலில்

0

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தாய்நாட்டிற்கான படையினர் அமைப்பின் தலைவர் ஓய்வுப்பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இன்று (24) மன்றில் முன்னிலையான அவரை, எதிர்வரும் 07ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக கனேபொல இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன் அவரது மனநிலை குறித்து அறிக்கை ஒன்றையும் சமர்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like