Sri Lanka 24 Hours Online Breaking News

உயர் நீதிமன்ற நீதியரசர் நியமனத்துக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி

0

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொடவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன ஜயவர்தன காலமானதை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்தைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதியினால் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டது.

இதற்கான அனுமதியை அரசியலமைப்பு சபை இன்று வழங்கியுள்ளது.

2019 ஆம் ஆண்டு மார்ச 28 ஆம் திகதி முதல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட கடமையாற்றி வருகின்றார்.

தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த டிசெம்பர் மாதம் 24 ஆம் திகதி உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன ஜயவர்தன காலமானார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like