32 C
Colombo
Thu, 09 Apr 2020 04:31:33 +0530

கொரோனா மரணங்கள் பதிவாகாத நாள்: சீனா நிம்மதி

கொரோனா மரணங்கள் பதிவாகாத நாள்: சீனா நிம்மதி சீனாவில் கொரோனா வைரஸால் மரணங்கள் பதிவான ஜனவரி மாதத்திலிருந்து, முதல் முறையாக மரணங்கள் ஏதும் நிகழாத நாள் இன்று (7) என அந்நாட்டின் தேசிய சுகாதார...
More

    நுகர்வு பொருட்களை வீடுகளுக்கே விற்பனை செய்வதற்கு நடவடிக்கை

    COVID-19

    ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

    மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மேயர் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, 2,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 141...

    சாராயம் அருந்திய 600 பேர் உயிரிழப்பு; 3800 பேர் வைத்தியசாலையில்

    கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அதிக செறிவு கொண்ட கலவையற்ற மதுபானத்தை அருந்திய 600 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் ஈரானில் இந்த சம்பவம்...

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெஹிவளையை சேர்ந்த குறித்த நபருடன்,...

    ஊரடங்கு உத்தரவு நீடிப்பு.. வெளியானது புதிய அறிவிப்பு

    கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் காணப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், ஏனைய மாவட்டங்களில் நாளை காலை...

    கொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக அவதானம் நிறைந்த மாவட்டங்களாக கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

    குறித்த மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

    குறித்த மாவட்டங்களுக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று (24) காலை தளர்த்திக்கொள்ளப்பட்டது.

    இதன்போது, பொருட்களை வாங்குவதற்காக விற்பனை நிலையங்களுக்கு பாரிய அளவில் பொதுமக்கள் திரண்டிருந்தமை வைரஸை கட்டுப்படுத்தும் செயற்பாட்டுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

    இதன் காரணமாக அத்தியாவசிய நுகர்வு பொருட்களை வீடுகளுக்கே கொண்டுசென்று விற்பனை செய்வதற்கு மொத்த வியாபாரிகளுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.

    சதொச, கீல்ஸ், லாஃப்ஸ், ஆர்பிகோ, ஃபுட் சிட்டி, அரலிய, நிபுன மற்றும் பிற மொத்த நிறுவனங்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

    அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தை முறையாக மேற்கொள்வதற்காக பசில் ராஜபக்ஷவின் தலைமையில் செயற்பாட்டு படையணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

    அமைச்சகங்களின் செயலாளர்கள், அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகள் படையணியின் ஏனைய உறுப்பினர்களாவர்.

    மேலும், அவதானம் நிறைந்த பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள், எரிபொருள் மற்றும் ஏனைய சேவைகளை தடையின்றி மற்றும் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு பெற்றுக்கொள்ளும் திட்டம் நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

    லொறி, வேன், முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் பொருட்களை விநியோகிப்பதற்காக பயன்படுத்தப்பட உள்ளன.

    குறித்த விநியோக வாகனங்களுக்கு ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் வீதியில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

    இதயும் பாருங்க

    அண்மைய செய்திகள்

    ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

    மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மேயர் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, 2,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 141...

    சாராயம் அருந்திய 600 பேர் உயிரிழப்பு; 3800 பேர் வைத்தியசாலையில்

    கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அதிக செறிவு கொண்ட கலவையற்ற மதுபானத்தை அருந்திய 600 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் ஈரானில் இந்த சம்பவம்...

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெஹிவளையை சேர்ந்த குறித்த நபருடன்,...

    நாட்டாமையின் வேற லெவல்… வைரலாகும் வீடியோ

    கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் பல நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைப்பக்கத்தில் சுவராசியமான பல வீடியோக்களை வெளியிட்டு தங்களது ரசிகர்களை...

    மது கிடைக்காததால் மனோரமாவின் மகன் விபரீத செயல்

    பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்துள்ள செய்தி திரை உலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது பழம்பெரும் நகைச்சுவை நடிகையாக...