பாதாள உலக குழு

 

நுவரெலியாவில் இடம்பெற்றதாக கூறப்படும் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், சந்தேக நபர்கள் கொள்ளையடித்த வாகனம், தங்க நகைகள் மற்றும் கொள்ளையிட பயன்படுத்திய மோட்டார் சைக்களில் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் கூறியுள்ளனர்.

55 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் வாகனம் மற்றும் 3 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பிலேயே குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வெல்லாவிட்ட பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் சந்தேக நபர்கள் இருவரையும் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.