ஊடக அறம், உண்மையின் நிறம்!

நுவரெலிய மாநகர சபையின் முன்னாள் தலைவருக்கு அழைப்பாணை

நுவரெலிய மாநகர சபையின் முன்னாள் தலைவர் கமகே மஹிந்த குமாரவுக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதினமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

அரசாங்கத்துக்கு 225,000 ரூபா நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டுடன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகைக்கு அமைய கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு வசந்தகால கொண்டாட்டத்தின் மூலம் நுவரெலியா மாநகர சபைக்கு கிடைக்க வேண்டிய 225,000 ரூபாய் பணம் மாநகர சபையின் கணக்கில் வைப்பிலிடப்படாமல் தனது சொந்தக் கணக்கில் வைப்பிலிட்டதன் மூலம் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக பிரதிவாதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கமகே மஹிந்த குமாரவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 07ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.colombotamil.lk

Facebook – http://www.facebook.com/TheColomboTamil

Twitter – www.twitter.com/TheColomboTamil

Instagram – www.instagram.com/TheColomboTamil

Contact us – info@colombotamil.lk

#TamilNews, #SriLanka, #Colombo, #lka #LkNews #TamilSportsNews, TamilCinemaNews