பகிடிவதை

பகிடிவதை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ருகுணு பல்கலைக்கழக பிரதான மாணவர் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட 19 மாணவர்களின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் மீண்டும் 21 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

புதிய மாணவர் ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் இன்றை தினம் மாத்தறை பிரதான நீதவான இசுறுநெத்தி குமார முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மாத்தறை மெதவத்தையில் உள்ள விடுதியில் வைத்து இந்த பகிடிவதை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

புதிய பகிடிவதை சட்டத்தின் கீழ் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.