பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா

85
கொல்கத்தா அணி
colombotamil.lk

ஐபிஎல் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், கொல்கத்தா அணியும் பஞ்சாபில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியில் நிகோலஸ் பூரான் 48 ரன்களும், அகர்வால் 36 ரன்களும் , மந்தீப் சிங் 25 ரங்களும் அடித்திருந்தனர்.

கெய்ல் 14 ரன்களிலே வெளியேறினார். அதிகபட்சமாக சாம் குரான் சிறப்பாக ஆடி 55 ரன்கள் விளாசினார். இதன் மூலம் 20 ஓவரில் பஞ்சாப் அணி 183 ரன்கள் அடித்தனர்.

184 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. ஆரம்ப முதலே கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடியது.அதிரடியாக விளையாடிய லின் 46 ரன்களில் வெளியேறினார்.பின் உத்தப்பா 22 மற்றும் ரசல் 24 ரன்களில் வெளியேறினார்கள்.

இறுதியாக கொல்கத்தா அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 185 ரன்கள் மட்டும் அடித்தது.கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக கில் 65 ரன்கள் அடித்தார்.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சில் அஸ்வின்,சமி ,டை தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.இதன் மூலம் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!