இந்தியா

படம் ஓடவேண்டும் என்பதற்காகவே விஜய் தாக்குகிறார் – ஜெயக்குமார் பதிலடி

படம் ஓடவேண்டும் என்பதற்காக தங்களை தாக்குவதாகவும், அதிமுக பழுத்த மரம் என்பதால் கல்லடி படுவதாகவும், நடிகர் விஜய் விமர்சனம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

விஜய், கவுண்டமணி, செந்தில் என யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கோவாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னை திரும்பினார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றித் தரப்படுவதாக கூறினார்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் தமிழகத்திற்கு என்ன நன்மை என அவர் விளக்கினார். நடிகர் விஜய் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு, பழுத்த மரம் என்பதால் அதிமுக கல்லடி படுகிறது என்றார்.

உலகத்திலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி என திமுகவையும் அவர் கடுமையாக விமர்சித்தார். செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கவே, தொண்டைத் தண்ணீர் வற்றிவிட்டது என்னை விடுங்கள் என்று நகைச்சுவையாக கூறிவிட்டு அமைச்சர் ஜெயக்குமார் அங்கிருந்து சென்றார்.


உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close