ஊடக அறம், உண்மையின் நிறம்!

படுக்கையில் அலைபேசி பயன்படுத்துபவர்களே… இந்த பதிவு உங்களுக்கே

தினமும் உறங்குவதற்கு முன்பு நமது ஸ்மார்ட் போனினை பயன்படுத்துவது ஒரு அன்றாட பழக்கம் போல் ஆகிவிட்டது. அது நம் கண்களுக்கும், உடல் நாலத்திற்கும் மிகவும் கேடு என்று தெரிந்தும்கூட நாம் அதை ஒரு பெரிய விடாயமாக எடுத்துக் கொள்ளுவதில்லை என்பது தான் உண்மை.

பொதுவாக தூங்குவதற்கு முன்பு எலெகட்ரானீக் கருவிகளைப் பயன்படுத்தினால் தூக்கத்தினைப் பாதிக்கும் என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அவைகள் நம் உள்ளூர ஏற்படுத்தும் பாதிப்புகளை அதிகமாக ஏற்படுத்துகின்றது என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மருத்துவர் ஒருவர் கூறுகையில், படுக்கையில் மொபைல் கருவிகளை பயன்படுத்தும் பழக்கமானது ஒரு விபரீதமான சங்கிலி எதிர்வினையை (dangerous chain reaction) உருவாக்குவதாக தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளியாகும் ஒளியானது ஃபோட்டான்கள் ஸ்ட்ரீம்களை (stream of photons) உருவாக்கம் செய்யுமாம். அந்த ஃபோட்டான்கள் ஸ்ட்ரீம்கள், நமது மூளைக்குள் நடக்கும் மெலடோனின் (melatonin) சுரப்பை தடுக்குமாம்.

மெலடோனின் – மனிதர்களின் உறக்க-விழிப்பு சுழற்சியைக் (sleep wake cycle) கட்டுப்படுத்தும் இயக்குநீர் என்றும் கூறலாம். இதுபோன்ற மெலடோனின் சுரப்பு தடுக்கப்படும் போது நாம் சோர்வாகவோ, அசதியாகவோ உணர மாட்டோம். தொடர்ந்து மொபைல் கருவிகளை பயன்படுத்திக் கொண்டே இருப்போம்.

எந்தவொரு மருந்தும், போதை பொருளும் பயன்படுத்தாமல், 7 முதல் 8 மணி நேர உறக்கம் மிகவும் அவசியம் என்றும், அது உடல் மற்றும் மன ரீதியான நன்மைக்கு மிகவும் அவசியம் என்றும் அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல உறக்கம் தான் ப்ரிமெச்யூர் டிமென்டியா (premature dementia) என்ற மனநிலை சார்ந்த பாதிப்பு, ஆல்சைமர் (Alzheimer) எனப்படும் அறிவாற்றல் இழப்பு போன்ற பொதுவான பாதிப்புகளில் இருந்து உங்களை பாதுகாக்கும் என்பதும், உங்கள் முழு உடல் செல்லுலார் நடவடிக்கையை சுய கட்டுப்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூளையின் நச்சு இரசாயனங்களை சுத்தம் செய்ய உடலுக்கு 7 முதல் 8 மணி நேர உறக்கம் என்பது மிகவும் கட்டாயம் என்றும் அப்போது தான் அடுத்தடுத்த நாளுக்கான வேலையை மூளை செய்யும் என்கின்றனர் அறிவியலாளர்கள்.

அதுமட்டுமின்றி தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு எலெக்ட்ரானிக் கருவிகள் சார்ந்த வேலையினை முடித்துவிட்டு, தூங்குவதற்கு செல்வது மிகவும் நல்லதாம்.