பட்ஜெட்டுக்கு பின்னர் கூட்டணி தொடர்பான இறுதி முடிவு

64
மனோ கணேசன்
colombotamil.lk

ஐக்கிய தேசிய முன்னணியின் யாப்பை அதன் கூட்டணி கட்சிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு அவசியமான யாப்பு குறித்து பங்காளிக் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்தவாரம் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பில், யாப்பு தொடர்பான முதற்கட்ட வரைவு கையளிக்கப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சில கட்சிகளின் தலைவர்கள் பதிலளித்துள்ள நிலையில், வரவு – செலவுத் திட்டத்தின் பின்னர் இது குறித்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, கூட்டணி தொடர்பான இறுதி முடிவை மேற்கொள்ள முடியும் என்ற நிலைப்பாட்டில் அதன் அனைத்து கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் உள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.