‘பதவி காலம் தொடர்பில் ஜனாதிபதி நீதிமன்றத்துக்கு செல்லமாட்டார்’

32
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,
W3Schools

தமது ஜனாதிபதி பதவி காலத்தின் ஆரம்பம் மற்றும் நிறைவடையும் காலம் தொடர்பில் உச்ச நீதிமன்றிடம் விளக்கம் கோருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானிக்கவில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால இதனைக் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள சிலருக்கு அதற்கான தேவை காணப்பட்டாலும், இந்த விடயம் தொடர்கில் ஜனாதிபதி இதுவரை எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதனை பிற்போடுவதற்காக சிலரால் இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

W3Schools