ஊடக அறம், உண்மையின் நிறம்!

பயிற்சிகளுக்காக இணைத்துக்கொண்ட 6,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்

6,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரச சேவைகளின் பயிற்சிகளுக்காக இணைத்துக்கொண்ட பட்டதாரிகளுக்கே இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது.

பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கான தகுதிகளை பரீட்சிப்பதற்காக 10 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பட்டதாரிகள் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் பயிற்சிகளில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

அரச நிறுவனங்களின் முகாமைத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram