விபத்தில் நால்வர் காயம்

காலி, தெனியாய வீதியில் கனங்கே பகுதியில் இன்று (07) இடம்பெற்ற பஸ் விபத்தில் 18 காயமடைந்து, இமதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கனங்கே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலியில் இருந்து அக்குரஸ்ஸ நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், அக்குரஸ்ஸவில் இருந்து காலி நோக்கிய பயணித்த தனியார் பஸ் என்பன இவ்வாறு மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.

இமதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஐந்து பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக காலி, கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனங்கே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.