பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மருத்துவமனையில் அனுமதி

இதயும் பாருங்க

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக காலி, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை...

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்துக்கு வட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு மத்திய...

‘தாமரைக் கோபுரம்’ திறந்து வைக்கப்பட்டது

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரைக் கோபுரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நேற்று திறந்து வைக்கப்பட்டது. கொழும்பில் சீன அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இந்தக் கோபுரம்...

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி : ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலக்குறைவால் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

பாகிஸ்தானில் 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தவர் ஆசிப் அலி சர்தாரி. இவர், பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான பெனாசீர் பூட்டோவின் கணவர் ஆவார்.

ஆசிப் அலி சர்தாரி, தனது பதவி காலத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அந்நாட்டு தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் 1ஆம் திகதி தேசிய பொறுப்புடைமை குழு அதிகாரிகள் ஆசிப் அலி சர்தாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து, அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

உடல் நலக்குறைவால் அவதிப்படும் தனது தந்தைக்கு, சிறையில் போதுமான மருத்துவ உதவிகளை செய்ய இம்ரான்கான் அரசு மறுத்துவருவதாக ஆசிப் அலி சர்தாரியின் மகன் பிலாவால் பூட்டோ குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக ஆசிப் அலி சர்தாரி, தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

சிறையில் இருந்து ஆம்புல்ன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், இருதய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதையொட்டி மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

- Advertisement -

colombotamil android app

இது புதுசு

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 17

விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 31 செவ்வாய்கிழமை திரிதியை மாலை 3.27 மணி வரை. பின் சதுர்த்தி அசுபதி மறு நாள் காலை 6.06 மணி வரை பின் அசுபதி தொடர்கிறது. சித்த...

இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்

தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்துள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தர்மபுரி அதனை சுற்றியுள்ள அன்னசாகரம் வெண்ணம்பட்டி பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு...

படம் ஓடவேண்டும் என்பதற்காகவே விஜய் தாக்குகிறார் – ஜெயக்குமார் பதிலடி

படம் ஓடவேண்டும் என்பதற்காக தங்களை தாக்குவதாகவும், அதிமுக பழுத்த மரம் என்பதால் கல்லடி படுவதாகவும், நடிகர் விஜய் விமர்சனம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். விஜய், கவுண்டமணி, செந்தில் என யார் வேண்டுமானாலும் கட்சி...

தேரரின் சடலத்தை கடற்கரையில் தகனம் செய்யுமாறு உத்தரவு

நீராவியடி விகாரையின் பெளத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை...

முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு சென்றார் ஞானசார தேரர்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக மரணமான நிலையில் அவரின் உடலை நீராவியடியில் தகனம் செய்வதற்கு தடைகோரி பிள்ளையார்...

More Articles Like This