Close

பாடசாலைகள் திறக்கப்படுவது தொடர்பில் கல்வி அமைச்சர் தகவல்

பாடசாலை

கொரோனா வைரஸுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியீட்டியதன் பின்னரே பாடசாலைகளைத் திறக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “கொரோனாவுடனான போராட்டத்தை முடித்து நாங்கள் பாடசாலைகளைத் திறப்போம். மாணவர்களை மீண்டும் பாடசாலைகளுக்கு கொண்டு வருவோம்.

போராட்டத்தின் ஆரம்பமும் போராட்டத்தின் முடிவும் மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவது தொடர்பிலேயே இருக்கின்றது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் நாங்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி கலந்துரையாடலில் ஈடுபட உள்ளோம்.

மாணவர்களின் பாதுகாப்பு 100சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டால் தான் நாங்கள் மாணவர்களைப் பாடசாலைக்கு கொண்டு செல்வோம்.” என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
x
scroll to top