கத்திக்குத்து

அக்மீமன பகுதியில் பாடசாலை ஒன்றுக்குள் அத்துமீறி நுழைவதற்கு முற்பட்ட நபர் ஒருவர் மீது, அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்தவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

அதில் படுகாயமடைந்த குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, பாடசாலைக்குள் பலவந்தமான நுழைய முற்பட்ட போது துப்பாக்கிச் சூடு நடத்திய பாதுகாப்பு படையின் வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார் ,