ஹட்டன்

பாடசாலை மாணவர்கள் பயணித்த தனியார் பஸ்ஸொன்று ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில், டிக்கோயா – வனராஜா பகுதியில்  இன்று பிற்பகல் 03 மணியவில் 15 பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் பஸ், சீரற்ற காலநிலை காரணமாக, வீதியை விட்டு விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 18 மாணவர்கள் மற்றும் 14 பயணிகள் டிக்கோயா, கிளங்கன் மாவட்ட வைத்தியலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.