5 ரூபாயால் பாணின் விலையை அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் மேற்கொண்டிருந்த தீர்மானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, மீண்டும் பழைய விலையிலேயே பாணை விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக கோதுமை மா ஒரு கிலோகிராம் விலை 8 ரூபாயால் அதிகரிக்கப்பட்டதை அடுத்து, பாணின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டது.