ஊடக அறம், உண்மையின் நிறம்!

பாண்டிங் ஆரூடம் பலிக்குமா?

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஜனவரி 14ஆம் திகதி தொடங்கி ஜனவரி 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கான பயிற்சிகளை நான்கு நாட்களுக்கு முன்னரே ஆஸ்திரேலிய அணி தொடங்கிவிட்டது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2019ஆம் ஆண்டு முழுவதும் சிறந்து விளங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் அசத்தலான வெற்றியைப் பெற்றது.

அதன்பிறகு இதுவரை எந்தவொரு சர்வதேச ஒருநாள் போட்டியிலும் இந்தியா – ஆஸ்திரேலியா மோதியதில்லை.

தற்போது நடந்துவரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் ஆதிக்கம் செலுத்தி போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முதல் ஒருநாள் போட்டி குறித்து விராட் கோலி பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, “ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணியிடம் மோதும்போது புள்ளிவிவரங்களை வைத்து ஆட்டத்தின் முடிவை கணிக்கக்கூடாது.

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி வருவது ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்துவதற்கு முக்கியமான காரணமாக அமைகிறது. அவர்களை நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது” என்று கூறினார்.

இந்திய அணியுடன் விளையாடவிருக்கும் அணிகளுள் ஆஸ்திரேலிய அணியே ஆபத்து மிகுந்ததாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.

இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய – ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 137 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் இந்தியா 50 வெற்றிகள், ஆஸ்திரேலியா 77 வெற்றிகள் மற்றும் 10 போட்டிகளுக்கு முடிவு இல்லாமல் ரத்தாகியுள்ளன.

முதலாம் ஒருநாள் போட்டி இன்று மதியம் 1:30 மணிக்குத் தொடங்கவுள்ளது. மும்பையில் அமைந்துள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறப்போவதால் ஈரப்பதமான களத்தில் தாக்குப் பிடிப்பதற்காக, பயிற்சியின்போதே ஈரமான பந்தில் வீரர்கள் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram