இலங்கைநேரலை

முழுமையாக முடக்கும் தீர்மானம் இல்லை – பாதுகாப்பு செயலாளர்

கொரோனா தாக்கம் தொடர்பான தற்போதைய நிலையினை கருத்தில் கொண்டு, நாட்டினை முழுமையாக முடக்கும் (லொக்டவுன்) தீர்மானம் எதனையும் அரசாங்கம் எடுக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

நாடு முழுவதுமாக ஐந்து நாட்கள் முற்றிலும் முடக்கப்பட உள்ளதாக பரவிவரும் வதந்தி தொடர்பாக கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், குறித்த வதந்தி மூலம் பொதுமக்களுக்கு ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் உண்மையில் இதுபோன்ற எவ்வித தீர்மானங்களும் அரசாங்கத்தினால் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு பொதுமக்கள் வழங்கும் ஒத்துழைப்புக்கு அமைவாகவே கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தினை குறைத்துக்கொள்ள முடியும் எனவும் அவ்வாறான நிலை ஏற்படும் போது தற்போது அமுல்படுத்தப்படும் ஊரடங்கு நிலை படிப்படியாக குறைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இவ்வாறாக ஆதாரமற்ற முறையில் தெரிவிக்கப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் மக்கள் மத்தியில் வதந்திகளை பரப்பி தேவையற்ற அச்ச நிலையை ஏற்படுத்தும் இவ்வாறான நபர்கள் மீது பொலிஸாரினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார்.

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More
Back to top button
x
Close
Close