பானி புயல் – 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் முகாம்களில் தஞ்சம்

64
colombotamil.lk

ஒடிசாவில் பானி புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பல்வேறு முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

வங்கக் கடலில் உருவாகி, அதிதீவிர புயலாக உருமாறியுள்ள பானி புயல், ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தின் தெற்கு கடலோரப் பகுதியில் இன்று கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிதீவிர புயலாக மாறியுள்ள பானி புயல், புரி மாவட்டத்தின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலி பகுதிகளுக்கு இடையேயான கடலோரப் பகுதியில் பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது, மணிக்கு 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

இந்நிலையில், ஒடிசாவில் பானி புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பல்வேறு முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

பானி புயல் காரணமாக, பயணிகளின் பாதுகாப்பு கருதி 200-க்கும் மேற்பட்ட ரயில்களை தென்கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

முன்னெச்சரிக்கையாக அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. புவனேஷ்வர், கொல்கத்தா விமான நிலையங்க்ள் மூடப்பட்டுள்ளன.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.

Colombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!