Latest news from around the world

பாப்புவா நியூ கினிக்கு வடக்கே எரிமலை வெடிப்பு

பாப்புவா நியூ கினிக்கு வடக்கே உள்ள தீவில் அமைந்துள்ள எரிமலை இன்று காலை வெடித்ததைத் தொடர்ந்து சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் கிராமத்துவாசிகள் அவ்விடத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

எரிமலைக் குழம்பு வழிந்தோடவே குறைந்தது 2,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர்.

10 கிலோமீட்டர் அகலம் கொண்ட மனம் தீவில் (Manam Island) சுமார் 9,000 பேர் வாழ்ந்து வருகின்றனர்.

எரிமலைக் குழம்பு வழிந்தோடும் பாதையில் மூன்று கிராமங்கள் உள்ளன.

அவற்றிலிருந்து கிராமவாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

இன்று அதிகாலையில் எரிமலை வெடிக்கத் தொடங்கியது. எரிமலை வெடிப்பு கடல் மட்டத்திலிருந்து 15 கிலோமீட்டர் உயரத்திற்குச் சாம்பலைக் கக்கியது.