டெல்லி பா.ஜ.கவின் முன்னாள் தலைவர் மங்கே ராம் கார்க் (81). இன்று காலை காலமாகியுள்ளார்.

பாஜகவில் பொருளாளர், மாவட்ட தலைவர் போன்ற பல்வேறு பொறுப்புகளை வகித்த கார்க், கடந்த 1997ஆம் ஆண்டு அக்கட்சியின் டெல்லி மாநில தலைவரானார்.

கடந்த 1983ஆம் ஆண்டில் நகராட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இதன்பின் சட்டசபை தேர்தலில் மூன்று முறை போட்டியிட்டு உள்ளார்.

எனினும், கடந்த 2003ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஒரே ஒரு முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இந்நிலையில், இன்று காலை 7.30 மணியளவில் அவர் காலமானார். அவரது மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.