ஊடக அறம், உண்மையின் நிறம்!

பிகில் ட்ரெயிலர் வெளியானது… கதை இதுதானா

பிகில் ட்ரெயிலர்

பிகில் ட்ரெயிலர் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது

ஆரம்பம் முதல் இறுதி வரை கால்பந்தினை மையமாக கொண்டு இருக்கிறது பிகில் ட்ரெயிலர். விஜய் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் மாஸான சண்டைக்காட்சிகள், காதல் காட்சிகளும் இடம்பெற்றிருக்கும் என்பது பார்க்கும்போதே தெரிகிறது.

‘ஐயம் வெயிட்டிங்க்’ … தளபதி விஜய்க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி!

இளம் வயது விஜய், வயதான விஜய் என கெட்டப்பில் மட்டுமல்ல வசன உச்சரிப்பு, தோரணையிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார் விஜய்.

தத்தளிக்கும் மகளிர் கால்பந்து குழுவை ரவுடியாக இருக்கும் விஜய் மீட்கிறார். கோச் ரவுடி என்பதால் கால்பந்து அணியில் இருப்பவர்கள் அவரை மதிக்க மாட்டேன் என்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் விஜய் ரவுடி இல்லை. வெறித்தனமான முன்னாள் கால்பந்து வீரர் என்பதும் கால்பந்து அமைப்பில் நடைபெற்ற அரசியல் காரணமாக விளையாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்பதும் தெரியவருகிறது.

அதன்பின் தத்தளித்த மகளிர் கால்பந்திளை எப்படி மீட்டார் என்பதுதான் மிச்சக் கதை என்பது ட்ரைலரை பார்த்தவுடன் தெரிகிறது. நிச்சயம் இந்தக் கதையை தவிர வேறு புதிதாக சொல்லி நம்மை ஆச்சரியப்படுத்த மாட்டார் என நம்புவோம்.

அட்லியின் வெற்றியே ஒரே கதை என்றாலும் அதை அனைவரும் ரசிக்கும் படி கொடுப்பதுதான். அப்படித்தான் ராஜா ராணி, தெறி, மெர்சல் என வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை பிகிலாக வந்திருக்கிறார். இன்னும் இரண்டு வாரத்தில் பார்க்கலாம்.

Website – www.colombotamil.lk
Facebook – www.facebook.com/Thecolombotamil
Twitter – www.twitter.com/Thecolombotamil
Instagram – www.instagram.com/Thecolombotamil
Contact us – hello@colombotamil.lk
Download APP – Google Play
Gossip – www.gossip.colombotamil.lk
Videos – www.videos.colombotamil.lk

‘விஸ்வாசம்’ பாடல் குறித்த முக்கிய தகவல்

தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்கிய ‘சங்கத்தமிழன்’!

லொஸ்லியா நீயெல்லாம் திருந்தவே மாட்ட.. கடுப்பான ரசிகர்கள்browser tab)

கவர்ச்சி நடிகை தற்கொலை!உண்மையை வெளியிட்ட பிரபல இயக்குனர்

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய குழுவினர் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

பிகில் டிரைலர் ரன்னிங் டைம்

கவர்ச்சி நடிகை தற்கொலை!உண்மையை வெளியிட்ட பிரபல இயக்குனர்

Leave A Reply

Your email address will not be published.