ஊடக அறம், உண்மையின் நிறம்!

பிக்பாஸ் தர்ஷன் வைத்த சஸ்பென்ஸ்!

பிக்பாஸ் – சீசன் 3 நிகழ்ச்சியில் தர்ஷன் டைட்டிலைப் பிடிப்பார் என பல கோடி ரசிகர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், முகேன் ராவ் வென்றது மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது.

ரசிகர்களின் ஏமாற்றத்தை உணர்ந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் கமல்ஹாசன், தர்ஷனின் திறமைகளைப் பாராட்டி தனது ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பேனரில் தர்ஷனுக்கு ஒரு படம் தயாரிக்கப்படும் என அறிவித்தார்.

ஆனால், அது இதுவரையிலும் நடைபெறவில்லை. எதைத் தேடி தர்ஷன் இந்த நிகழ்ச்சிக்கு வந்தாரோ அதை அவருக்குப் பெற்றுத் தருவதில் கமல்ஹாசனுக்கு இருந்த தீர்க்கம், நிகழ்ச்சி முடிந்ததும் இல்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், தர்ஷனுக்கு இப்போது பட வாய்ப்பு கிடைத்துவிட்டது.

தனது புதிய படம் குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ மூலம் அறிவிப்பு வெளியிட்ட தர்ஷன் “இத்தனை நாட்களில் எத்தனையோ கதைகளைக் கேட்டேன். ஆனால், அவற்றில் ஒரு கதை மட்டும் என் இதயம் வரை சென்று தொட்டது. எனவே, அந்தப் படத்தில் நடிப்பது என முடிவெடுத்திருக்கிறேன்.

இந்தப் படம் ஒரு புதிய ஹீரோவின் அறிமுகப் படமாக இருக்காது. அந்தளவுக்கு இந்தப் படத்தின் டீம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் யார் என்று இப்போது நான் சொல்ல விரும்பவில்லை.

இன்னும் சில நாட்களில் நான் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும். அப்போது முழு டீம் குறித்த தகவல்கள் உங்களுக்குத் தெரியவரும். அதுவரையிலும் காத்திருங்கள்.

நான் படம் நடிக்க இத்தனை நாட்களானாலும், என் மீது நீங்கள் காட்டிய அன்பு குறையவே இல்லை. இதற்கு எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் போதாது.

ஒரு படம் கூட நடிக்காத எனக்குப் பல பேஜ்களைத் தொடங்கி, என்னை புரமோட் செய்துவருகின்றனர். இதற்கெல்லாம் என் இதயத்திலிருந்து நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

யாருடன் இணைந்து இந்தப் படத்தில் தர்ஷன் வேலை செய்கிறார் என்பதை அறிவிக்காமல் சஸ்பென்ஸ் வைத்திருப்பது பல யூகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.

டீம் எதுவாக இருந்தாலும், அவர்களை ஒன்று சேர்க்கும் தயாரிப்பாளார் கமல்ஹாசனின் நிறுவனமா, இல்லையா என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. அதைத் தெரிந்துகொள்ளவும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.