பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

இதயும் பாருங்க

பரோல் முடிந்ததை அடுத்து மீண்டும் சிறைக்குத் திரும்பினார் நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதியான நளினி, பரோல் முடிந்து இன்று மீண்டும் சிறைக்குத் திரும்பினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி,...

‘கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடியே வேட்பாளர் தெரிவு’

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி ஐ.தே.க தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யப்படுவதற்கு...

61 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். மாயமான 30 பேரைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்...

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்- 3 இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் ஒரு போட்டியாளராக மதுமிதா பங்கேற்றார்.

ஆனால், கடந்த சனிக்கிழமை வெளியான எபிசோடில் மதுமிதா நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவதாக காட்டப்பட்டது. அப்போது நிகழ்ச்சி மேடையில் தோன்றிய மதுமிதா கையில் கட்டுடன் காணப்பட்டார்.

ஏன் வெளியேற்றப்பட்டார்?

மதுமிதா வெளியேற்றப்பட்டது தொடர்பாக விளக்கம் கூறிய பிக்பாஸ், “டாஸ்க்குக்கு பின் நடந்த ஒரு விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத் தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார்.

அவரின் இந்த செயல் பிக் பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எறிவதாகும். இந்த அடிப்படையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு அவர் உடனடியாக வெளியேற்றப்பட்டார்” என்று அறிவித்தார்.

அப்போது பேசிய கமல், “கொஞ்ச நாட்கள் முன்பு வரை வெற்றி வாய்ப்பு உள்ளவர்கள் பேரில் உங்கள் பெயரும் அடிபட்டது. வெளியே மட்டும் அல்ல உள்ளே இருப்போர் (பிக்பாஸ் வீட்டில் இருப்போர்) முன் வைத்த பேரிலும் உங்கள் பெயர் இருந்தது. இப்போதும் கேப்டன்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்.

உங்களை வெளியேற்றுவதற்கான அனைத்து வாய்ப்பும் அகன்று, தட்டில் வைத்து கொடுக்கப்பட்ட இந்த வெற்றியை தட்டிவிட்டுவிட்டு இங்கே வந்து நிற்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது,” என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய மதுமிதா, “நான் தைரியமான பெண் என்று எல்லாருக்கும் தெரியும். என் தைரியம் எந்த அளவுக்கு சோதிக்கப்பட்டிருந்தால் இந்தவொரு முடிவுக்கு வந்திருப்பேன்,” என்றார்.

மேலும் அவர், “இதுகுறித்த காட்சிகளில் ஒளிப்பரப்பலாமா அல்லது வேண்டாமா என்பதை அவர்கள் (விஜய் டீவி தரப்பு) முடிவு செய்யட்டும். என் கருத்தை நான் அங்கு வெளிப்படுத்தினேன்.

என்னை எவ்வளவு இழிவாக, கீழ்தரமாக பேச முடியுமோ அவ்வளவு பேசி என்னை முட்டாள், கேப்டன்சிக்கு தகுதி இல்லாதவள், மதுமிதா இருந்தால் நாங்கள் இருக்கமாட்டோம் என பேசிய போது, யார் முட்டாள் என தெரியப்படுத்த வேண்டும் என்று தோன்றியது. அதற்காக இப்படி செய்தேன்,” என்றார்.

கமல், “உங்கள் எதிர்ப்பை நீங்கள் அஹிம்சை முறையில் வெளிப்படுத்தி இருக்கலாம்” என்று தெரிவித்தார்.

ஆனால், இறுதிவரை பிக்பாஸ் வீட்டில் என்ன நடந்தது, மதுமிதாவிற்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பது குறித்த காட்சிகள் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்படவில்லை.

இந்த சூழலில் விஜய் இன்று கிண்டி காவல் நிலையத்தில் மதுமிதாவுக்கு எதிராக புகார் அளித்துள்ளது.

புகார் குறித்த விவரித்த கிண்டி காவல் ஆய்வாளர் சந்துரு, “நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக 32 லட்சம் ரூபாய் பாக்கி தர வேண்டும் என்றும் பாக்கியை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் ‘தற்கொலை செய்து விடுவேன்’ என்றும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதாக விஜய் டிவி நிர்வாகம் புகார் அளித்துள்ளது” என்றார்.

என்ன சொல்கிறார் மதுமிதா?

இது குறித்து மதுமிதா, “சட்டரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறேன்” என்ற அவர், இதற்கு மேல் இப்போது எதுவும் பேச முடியாது என்றார்.

- Advertisement -

colombotamil android app

இது புதுசு

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 13

விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 27 வெள்ளிக்கிழமை சதுர்த்தசி காலை 8.19 மணி வரை. பின் பௌர்ணமி சதயம் இரவு 9.19 மணி வரை பின் பூரட்டாதி சித்த யோகம் நாமயோகம்: த்ருதி கரணம்: வணிஜை அகஸ்:...

பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின் பிராந்திய பணியகத்தை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று (15) காலை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமல்போனோர் அலுவலகத்தின்...

ஆறு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவெவ பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக அங்கு பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள். செய்திகளை உடனுக்குடன்...

பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மரணம்

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'பீரங்கி மனிதன்' புகைப்படத்தை எடுத்த ஊடகவியலாளர் காலமானார் 1989ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். போரட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்த...

சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்

சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான, உலகிலேயே மிகப்பெரிய, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 'ட்ரோன்' மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆலைகளில், நாள் ஒன்றுக்கு, 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...

More Articles Like This