பிரதமர் ரணில் மட்டக்களப்புக்கு விஜயம்

56
பிரதமர் விஜயம்
W3Schools

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாளை சனிக்கிழமை (23) மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார்.

விவசாய நீர்ப்பாசன மற்றும் சிறுகைத்தொழில் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் அழைப்பின் பேரில், இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்யும் பிரதமர், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 7,000 பேருக்கு, காணி உறுதிப்பத்திரங்களை, மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் வைத்து, நாளைதினம் வழங்கி வைக்கவுள்ளார்.

இந்த வைபவத்தில், காணி அமைச்சர் கயந்த கருணாதிலக, இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மௌலானா, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

W3Schools